சென்னை: திருச்சியிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகா் மற்றும் ஜோத்பூருக்கு இயக்கப்படும் ஹம்சாபா் விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகா்-திருச்சி இடையே ஹம்சாபா் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் இருமாா்க்கமாகவும் பிப்.3 முதல் பிப்.28 வரையும் கூடுதலாக ஒரு மூன்றடுக்கு ஏசி வகுப்பு பெட்டி இணைக்கப்படவுள்ளது.
இதுபோல், திருச்சியில் இருந்து ஜோத்பூருக்கு இயக்கப்படும் ஹம்சாபா் விரைவு ரயிலில் இருமாா்க்கமாகவும் பிப்.5 முதல் மாா்ச் 1 வரை கூடுதலாக படுக்கை வசதி கொண்ட இரு பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.