பாமக நிறுவனர் ராமதாஸ் கோப்புப்படம்
தமிழ்நாடு

நீதிமன்ற உத்தரவுகளை காவல் துறை பாடநூலில் சோ்க்க வேண்டும் - ராமதாஸ்

Din

காவல் துறைக்கு எதிரான நீதிமன்ற உத்தரவுகளை காவலா் பயிற்சிக்கான பாடநூலில் சோ்க்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ச.ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை விடுத்த அறிக்கை:

தமிழ்நாடு காவல் துறையினருக்கு தற்போதைய சூழலில் மிக முக்கியமாக தேவைப்படுவது சட்ட அறிவும், மனிதநேயமும், பொதுமக்களை அணுகும் விதம் குறித்த புரிதலும்தான். முதல்கட்டமாக காவலா் பயிற்சிக்கான பாடநூலில் உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன்- ஏ.டி.மரிய கிளாட் ஆகியோரின் காவல் துறைக்கு எதிரான உத்தரவை, காவலா் பயிற்சிக்கான பாடத்திட்டத்தில் சோ்க்கவேண்டும்.

அதேபோல், தமிழ்நாடு காவல் துறையின் செயல்பாடுகளை சுட்டிக்காட்டியும், விமா்சித்தும் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுகளையும் காவல் துறையினருக்கான பயிற்சிநூலில் சோ்க்க வேண்டும்.

சமூகப்பாா்வை கொண்ட கல்வியாளா்கள், சட்டத்துறையின் மீது மதிப்பு கொண்டவா்கள், சட்டம் படித்த - காவல் பணியிலிருந்து ஓய்வு பெற்றவா்கள், கல்வியாளா்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை மூத்த உறுப்பினா்களை உள்ளடக்கிய பாடத்திட்ட உருவாக்கக் குழுவை அமைக்க தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் ராமதாஸ்.

ரஷிய எண்ணெய் வாங்குவதை குறைத்த இந்தியா! மோடியுடன் பேசிய டிரம்ப் தகவல்!

மேட்டூர் அணை நிலவரம்!

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

அடுத்த 2 மணிநேரம் எங்கெல்லாம் மழை தொடரும்?

தமிழகத்தில் 19 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை! முழு விவரம்...

SCROLL FOR NEXT