கோப்புப் படம் 
தமிழ்நாடு

இரவில் சென்னை உள்பட 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை உள்பட 22 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 22 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அடுத்த மூன்று மணிநேரத்துக்கு செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் மயிலாடு துறை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை, திருவள்ளூர், வேலூர், திருப்பூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, ஈரோடு, சேலம், நாமக்கல், தஞ்சாவூர், நீலகிரி மற்றும் கோவை மலையோரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | சரக்கு ரயில் தடம்புரண்டு மின்கம்பத்தில் மோதியதால் தீ விபத்தா?: அதிகாரிகள் விளக்கம்

The Chennai Meteorological Department has announced that there is a possibility of rain in 22 districts, including Chennai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப்.15 வரை மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் விவசாயிகள் சங்கம் கோரிக்கை

டிப்ஸ்... டிப்ஸ்...

அரச இலைக் கொழுந்து துவையல்

புடலங்காய் தோசை

அவல் லாடு

SCROLL FOR NEXT