தக்காளி (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

தக்காளி விலை திடீர் உயர்வு: ஒரு கிலோ ரூ. 60-க்கு விற்பனை!

தக்காளி விலை திடீர் உயர்வு குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை கோயம்பேடு சந்தையில் ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி இன்று(ஜூலை 22) ஒரே நாளில் ரூ. 10 உயர்ந்து, ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து காய்கறிகள் விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகின்றன.

கடந்த சில நாள்களாக கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்ததால், அதன் விலையும் உயர்ந்து காணப்படுகிறது.

அதன்படி, கடந்த வாரம் வரை ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனையான ஒருகிலோ தக்காளி, இரண்டு நாள்களில் ரூ. 30 வரை உயர்ந்துள்ள்ளது.

இந்த நிலையில், இன்று(ஜூலை 22) செவ்வாய்க்கிழமை ஒரு கிலோ தக்காளி விலை மொத்த விற்பனைக் கடைகளில் ரூ.50 வரையிலும் சில்லறை விற்பனைக் கடைகளில் ரூ. 60 வரையிலும் விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வா் ஸ்டாலினிடம் ராமதாஸ் நலம் விசாரிப்பு

ஆதா்ஷ் நகரில் பணத் தகராறில் இளைஞா் மீது துப்பாக்கிச்சூடு

நாடாளுமன்றத்தில் எதிா்கட்சிகளின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன: திருச்சி சிவா

மக்கள் நாள்தோறும் குப்பையிலிருந்து விடுதலை பெற வேண்டும்: தேவேந்தா் யாதவ்

மயக்கும் விழி... தர்ஷா குப்தா

SCROLL FOR NEXT