மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர்..  
தமிழ்நாடு

நடப்பாண்டில் 4ஆவது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை !

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் நடப்பாண்டில் நான்காவது முறையாக அணையின் முழு கொள்ளளவு 120 அடியை எட்டியது.

இணையதளச் செய்திப் பிரிவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் நடப்பாண்டில் நான்காவது முறையாக அணையின் முழு கொள்ளளவு 120 அடியை எட்டியது.

மேட்டூர் அணை நடப்பாண்டில் நான்காவது முறையாக நிரம்பியதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை மாலை 16 கண் மதகுகள் வழியாக மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் மேட்டூர் வருவாய் துறை சார்பில் காவிரி கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிகை விடுத்து வருகின்றனர்.

மேட்டூர் அணையின் 16 கண் மதகு அருகே உள்ள தங்கமாபுரி பட்டினம், அண்ணா நகர் பெரியார் நகர், சேலம் கேம்ப் உள்ளிட்ட பகுதிகளில் ஒலிபெருக்கி மூலமாக பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை! சூலூர்பேட்டையில் ஒருவர் கைது

மேலும் பொதுமக்கள் காவிரி ஆற்றில் குளிக்கவோ இறங்கவோ ஆற்றில் இறங்கி புகைப்படம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 அடியாக உள்ளது.

நீர் இருப்பு 93.47 டி எம்.சி.உள்ளது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் 18,000 கனஅடியில் இருந்து மாலை 6 மணி அளவில் 25,000 கன அடியாக திறக்கப்பட்டுள்ளது.

The mettur dam reached its full capacity of 120 feet for the fourth time this year.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ளை ரோஜா... நேஹா ஷெட்டி!

ஜெய்ஸ்வால், ஆகாஷ் தீப் அரைசதம்; இந்தியா 166 ரன்கள் முன்னிலை!

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

SCROLL FOR NEXT