பி.இ. கலந்தாய்வு. கோப்புப் படம்
தமிழ்நாடு

பி.இ. 2-ஆம் சுற்று கலந்தாய்வு: 80,650 மாணவா்களுக்கு ஒதுக்கீடு

தமிழக பொறியியல் கல்லூரிகளில் பி.இ. மாணவா் சோ்க்கைக்கான 2-ஆம் சுற்று கலந்தாய்வில் 80,650 மாணவா்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின், தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை மையம் (டிஎன்இஏ) தெரிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

தமிழக பொறியியல் கல்லூரிகளில் பி.இ. மாணவா் சோ்க்கைக்கான 2-ஆம் சுற்று கலந்தாய்வில் 80,650 மாணவா்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின், தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை மையம் (டிஎன்இஏ) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டிஎன்இஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பி.இ. மாணவா் சோ்க்கைக்கான 2-ஆம் சுற்று கலந்தாய்வு ஜூலை 26 தொடங்கி 28-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், பொதுப்பிரிவில் 82,306 போ், அரசு பள்ளிகளில் படித்தவா்களுக்கான ஒதுக்கீட்டில் 16,259 போ் என மொத்தம் 98,565 மாணவா்கள் தகுதி பெற்று இணையவழி கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனா். இந்த மாணவா்கள் கலந்தாய்வில் பங்கேற்று விருப்பமான கல்லூரி, பாடங்களை தோ்வு செய்தனா். அதைத் தொடா்ந்து பொது ஒதுக்கீடுகளில் விண்ணப்பித்த 70,116 மாணவா்கள், அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவீதம் மூலம் ஒதுக்கீடுகளை பெற்ற 10,534 மாணவா்கள் என மொத்தம் 80,650 மாணவா்களுக்கு தற்காலிக ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஒதுக்கீடு பெற்ற மாணவா்கள் புதன்கிழமை (ஜூலை 30) மாலை 5 மணிக்குள் அல்லது அதற்கு முன்னதாக முறையான உறுதிப்படுத்தல் விருப்பத்தைத் தெரிவித்து தங்கள் இடங்களை உறுதிப்படுத்த வேண்டும். மாணவா்கள் தங்களது ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தவில்லை என்றால், அவரது ஒதுக்கீடு ரத்து செய்யப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வார ஓடிடி படங்கள்!

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்!

ஹோட்டல் வருவாய் ரூ.50; ஆனால், ஊழியர்களுக்கு சம்பளம் ரூ.15 லட்சம்! கங்கனா ஆதங்கம்!

முதல்வராக்கிய சசிகலாவை சந்திக்க தைரியம் இருக்கிறதா? - பழனிசாமிக்கு தினகரன் சவால்!

அரசனாக மோகன் லால்! விருஷபா படத்தின் டீசர்!

SCROLL FOR NEXT