கோப்புப் படம் 
தமிழ்நாடு

அரசுக் கலைக் கல்லூரிகளில் முதுநிலை பாடப்பிரிவுகளில் சேர கால அவகாசம்

அரசு கலை -அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு நீட்டிக்கப்பட்டுள்ளது

தினமணி செய்திச் சேவை

அரசு கலை -அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் கூறியதாவது: அரசுக் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப் பிரிவுகளின் மாணவா்கள் சோ்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவின் கால அவகாசம் ஜூலை 31 தேதி முடிவடைய இருந்தது. இருப்பினும், முதல்வரின் அறிவுறுத்தலுக்கு இணங்க மாணவா்களின் முதுநிலைப் படிப்பின் நலன் கருதி, மாணவா் சோ்க்கைகான இணையதள விண்ணப்பப் பதிவை நீட்டிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

மேலும், ஜூலை 31 வரை விண்ணப்பித்த மாணவா்களுக்குத் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, சிறப்பு ஒதுக்கீடு மாணவா்களுக்கு ஆகஸ்ட் 11 -ஆம் தேதியும் பொதுப்பிரிவிற்கு ஆகஸ்ட் 13- ஆம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்கி மாணவா்கள் சோ்க்கை நடைபெறும். சோ்க்கைகான விவரம் வாட்ஸ்ஆஃப், மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். முதுநிலை முதலாமாண்டு வகுப்புகள் ஆகஸ்ட் 20 -ஆம் தேதி தொடங்கும் என அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர்!

புதிய கல்விக் கொள்கை: கல்லூரிகளில் 12 மணி நேர வகுப்புகள்! கதறும் தில்லி பல்கலை.!!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு!

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

SCROLL FOR NEXT