முதல்வர் ஸ்டாலின்.. 
தமிழ்நாடு

சித்திரைத் திருவிழா போல் முத்திரை பதித்த பொதுக்குழு! - முதல்வர் பெருமிதம்

சித்திரைத் திருவிழா போல் முத்திரை பதித்த பொதுக்குழு நடைபெற்றதாக முதல்வர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

DIN

சித்திரைத் திருவிழா போல் முத்திரை பதித்த பொதுக்குழு நடைபெற்றதாக முதல்வர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மதுரை - மேலூர் சாலை, உத்தங்குடியில் நேற்று (ஜூன் 1) திமுக பொதுக்குழுக் கூட்டம் 48 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு சுமார் 10,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பொதுக் குழுவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், முக்கிய சாலைகள் வழியாக சுமார் 25 கி.மீ. துரத்திற்கு ரோடு ஷோ நடத்தினார். இதில் உற்சாகமாக கலந்துகொண்ட முதல்வருடன் பொதுமக்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். அதைத் தொடர்ந்து மதுரை முதல் மேயர் முத்துவின் சிலையையும் அவர் திறந்து வைத்தார்.

இந்தப் பொதுக் குழு குறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தொண்டர்கள் பலருக்கு மடல்களையும் எழுதியுள்ளார்.

அந்தப் பதிவில், “பொதுக் குழுவா? கழக மாநாடா? என வியக்கும் வகையில் நடந்தேறியிருக்கிறது திமுக பொதுக்குழு! கலைஞர் 102-ஐச் செம்மொழிநாள் எனக் கொண்டாடி மகிழ்ந்து, ஓரணியில் தமிழ்நாடு என கழகத்தின் வலிமையைப் பன்மடங்காக்குவோம்!

தொடர்ச்சியான பயணங்களில் உங்களைச் சந்திப்பேன்! களம் 2026-இல் மகத்தான வெற்றியைப் பெற்று, ஆட்சியைத் தொடர்வோம்!” எனப் பதிவிட்டுள்ளார்.

அவர் எழுதியுள்ள வாழ்த்து மடலில், “திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு மதுரை மாநகரில் மற்றொரு சித்திரைத் திருவிழா போல நடந்து, கழக வரலாற்றில் முத்திரை பதித்திருக்கிறது.

மண்ணுக்கே உரிய கோலாகலத்துடன் 'பொதுக்குழுவா கழக மாநாடா!' என்று பிரமிக்கத்தக்க வகையில் எழுச்சிமிக்க கொள்கை நிகழ்வாக நடந்தேறியது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: வெளிநாடுகளுக்குச் சென்ற எம்.பிக்கள் குழுவைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயானத்துக்கு சடலம் கொண்டு செல்ல எதிா்ப்பு: உறவினா்கள் சாலை மறியல்

ஜூலையில் யமுனை நீரின் தரத்தில் மேம்பாடு: அமைச்சா் சிா்சா

மழை: நெல் மூட்டைகள் நனைந்து சேதம்!

இரு இடங்களில் கஞ்சா விற்ற மூவா் கைது

நாளைய மின் தடை: கடலூா் (கேப்பா் மலை)

SCROLL FOR NEXT