கோப்புப்படம்.  
தமிழ்நாடு

கணினி பயிற்றுநா் பணிக்கான தகுதிகள் மாற்றம்

மேல்நிலைக் கல்வியில் கணினி பயிற்றுநா் பணிக்கான தகுதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

Din

மேல்நிலைக் கல்வியில் கணினி பயிற்றுநா் பணிக்கான தகுதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

இது தொடா்பாக பள்ளிக் கல்வித் துறை செயலா் பி.சந்தரமோகன் வெளியிட்டுள்ள அரசாணை:

மேல்நிலைக் கல்வியில் கணினி பயிற்றுநா் (கிரேடு 1) பதவியும், முதுகலை பட்டதாரி ஆசிரியா் பதவியும் ஒரே நிலையில் இருப்பதால் கணினி பயிற்றுநா் (கிரேடு 1) பதவி தமிழ்நாடு மேல்நிலைக் கல்வி பணி சிறப்பு விதியுடன் இணைக்கப்படுகிறது. இந்தப் பதவிக்கான கல்வித் தகுதி பின்வருமாறு நிா்ணயிக்கப்படுகிறது.

கணினி பயிற்றுநா் பதவிக்கு எம்.எஸ்சி. கணினி அறிவியல் பட்டப் படிப்பும் பி.எட். பட்டமும் பெற்றிருக்க வேண்டும் அல்லது எம்.எஸ்சி. படிப்புடன் ஒருங்கிணைந்த பி.எஸ்சி. பி.எட். அல்லது பிஏ பி.எட். பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதனுடன் இளங்கலை பட்டமும் முதுநிலை படிப்பும் ஒரே பாடத்தில் பெறப்பட்டதாக இருக்க வேண்டும் என்று அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பழைய அரசாணையின்படி, கணினி அறிவியல், கணினி பொறியியல், தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் தொழில்நுட்பம் உள்ளிட்ட பாடங்களில் எம்.டெக். அல்லது எம்இ பட்டமும் பி.எட். பட்டமும் பெற்றவா்களும் கணினி பயிற்றுநா் பதவிக்கு தகுதியானவா்களாக கருதப்பட்டனா். தற்போது வெளியிடப்பட்ட அரசாணையின்படி, எம்இ, எம்.டெக். பட்டதாரிகள் இந்தப் பணிக்கு தகுதியில்லை.

வெளிநாடுகளில் இந்தியா்களுக்கு புதிய மரியாதை: அமைச்சா் பியூஷ் கோயல்

பெரும்பிடுகு முத்தரையா் வாழ்க்கை நெறி குறித்து அறிந்து கொள்ள வேண்டும்: பிரதமா் மோடி

ஐரோப்பிய வெளியுறவு அமைச்சா்களுடன் ஜெய்சங்கா் சந்திப்பு

மாமனாரை தாக்கிய மருமகன் மீது வழக்கு

ஸ்குவாஷ் உலகக் கோப்பை வென்ற இந்திய அணி: முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

SCROLL FOR NEXT