அடுத்த 2 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு (காலை 10 மணி வரை) கோயம்புத்தூர், நீலகிரி, தென்காசி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் திருநெல்வேலி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவமழை இயல்பாக 330 மி.மீ. மழை வேண்டிய நிலையில், நிகழாண்டில் 110 சதவீதம் அதிமாக பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதில், ஜூன் மாதத்தில் தமிழகத்தில் வட உள் மாவட்டங்களில் பருவமழை இயல்பைவிட குறைவாகவும், இதர மாவட்டங்களில் இயல்பையொட்டியும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: கலைஞர் கருணாநிதி பிறந்த நாளில் பொன்விழா காணும் இரு சமூகநலத் திட்டங்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.