தமிழ்நாடு

தங்கை கனிமொழியைக் கண்டு பெருமைகொள்கிறேன்: மு.க. ஸ்டாலின்

கனிமொழி குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவு...

DIN

இந்தியாவின் தேசிய மொழி குறித்து ஸ்பெயினில் கனிமொழி பேசியதற்கு பெருமைகொள்வதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம், பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது கடந்த மே 7 அன்று 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை மேற்கொண்டது. ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவமும் தாக்குதலை மேற்கொண்டது.

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கம் தருவதற்கு மத்திய அரசு சார்பில் எம்பிக்கள் அடங்கிய 7 குழுக்கள் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி ஸ்பெயின், ரஷியா நாடுகளுக்குச் சென்றுள்ளார்.

ஸ்பெயினில் அந்த நாட்டுப் பிரதிநிதிகளுடன் பேசிய கனிமொழி பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது இந்தியாவின் தேசிய மொழி குறித்து கேட்கப்பட்டதற்கு 'பன்முகத்தன்மை' என்று பதிலளித்துள்ளார். கனிமொழியின் இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,

"ஸ்பெயின் மண்ணில், 'இந்தியாவின் தேசிய மொழி பன்முகத்தன்மை' என உரக்கச்சொல்லி, மக்களின் உணர்வுகளைக் கைத்தட்டல்களாகவும் - உங்களால் அதிகம் பகிரப்படும் காணொளியாகவும் மாற்றிய தங்கை கனிமொழியை வாழ்த்தினேன்!

இந்திய நாட்டுக்கான குரலாகத் தமிழ்நாட்டின் அன்புமொழியை - ஒற்றுமை மொழியைப் பேசிய கனிமொழியைக் கண்டு பெருமைகொள்கிறேன்!" என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உச்சநீதிமன்றத்துக்கு 2 புதிய நீதிபதிகள்: கொலீஜியம் பரிந்துரை

புதிய வருமான வரி விதிகள்: டிசம்பருக்குள் அறிவிக்கை

சி.பி.ராதாகிருஷ்ணன் - சுதா்சன் ரெட்டி இடையே நேரடி போட்டி

வேளாண்மையில் பட்டயப்படிப்பு: விண்ணப்பிக்க அழைப்பு

‘கூலி’ படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்க கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT