தென்தமிழ்நாட்டின் எஃகு மனிதர் முதல்வர் ஸ்டாலின்: கனிமொழி எம்.பி. பேச்சு
தென்தமிழ்நாட்டின் எஃகு மனிதர் முதல்வர் ஸ்டாலின் என்று திமுக துணைப் பொதுச் செயலரும் எம்பியுமான கனிமொழி தெரிவித்துள்ளார்.
தென்தமிழ்நாட்டின் எஃகு மனிதர் முதல்வர் ஸ்டாலின் என்று திமுக துணைப் பொதுச் செயலரும் எம்பியுமான கனிமொழி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் இளைஞரணி மாநாட்டில் அவர் பேசுகையில், உழைப்பு, உழைப்பு என்ற வார்த்தைக்கு உதாரணமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார் முதல்வர். பாசிக சக்திகளை எதிர்க்கக்கூடிய தலைவரும் நான்தான் என்ற உறுதியோடும் வாழ்கிறார் முதல்வர் ஸ்டாலின். தென்தமிழ்நாட்டின் எஃகு மனிதர் என்று எல்லோரும் பாராட்டக்கூடிய தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
யாரோடு இருந்தால் தமிழ்நாடு பாதுகாப்பாக இருக்குமென்று பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் தெளிவாகத் தெரியும். முதல்வருடன் பெண்களும், இளைஞர்களும் இருக்கிறார்கள். இவ்வளவு பெரிய இளைஞர் கூட்டத்தை பார்க்கும்போது உதயநிதிக்கு வாழ்த்து மட்டும் சொல்லத் தோன்றவில்லை. வெற்றி நமது, வெற்றி நமது, என சொல்லத் தோன்றுகிறது.
Advertisement
Advertisement
திமுக வெற்றியை உறுதி செய்யும் மாநாட்டை உதயநிதி நடத்திக்கொண்டிருக்கிறார். துரோகத்தோடு கைகோத்துக் கொண்டு நமக்கு எதிராக ஒரு கூட்டணி உருவாகியிருக்கிறது. அதிமுக அல்ல பாஜக தலைமையிலான கூட்டணி. தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை நிறுத்தி வைத்துள்ள துரோகத்தோடு கூட்டணி வைத்துள்ளனர்.
தேர்தல் வருகிறது என்றாலும் தமிழ்நாட்டுக்கு அள்ளி அல்ல கிள்ளிகூட கொடுக்க மாட்டேன் என கூட்டணி. டிரம்ப் உடன் வர்த்தக ஒப்பந்த மாற்றத்தைக் கொண்டு வருவதாக பிரதமர் மோடி சொல்கிறார். ஆனால் நாம் அனுப்பக்கூடிய பொருள்களுக்கு அமெரிக்காவில் 18% வரி, அங்கிருந்து வரக்கூடிய பொருள்களுக்கு வரியே கிடையாது. இது எதற்கும் பிரதமர் மோடி பதில் சொல்லமாட்டார்.
குடியரசுத் தலைவர் உரையில் வழக்கமாக பிரதமர் பதில்சொல்ல வேண்டும். ஆனால் அவர் வரவே இல்லை. ஏனென்றால் அங்கு வைக்கப்பட்ட கேள்வி. நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்தபோது நீங்கள் எங்கு இருந்தீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் இல்லை. இவ்வாறு குறிப்பிட்டார்.
MP Kanimozhi has said that Chief Minister Stalin is the iron man of southern Tamil Nadu.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.