FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சென்னை நாள்: மு.க. ஸ்டாலின், கனிமொழி வாழ்த்து!

சென்னை நாளை முன்னிட்டு, திமுக தலைவர்கள் மு.க. ஸ்டாலின், கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளது பற்றி...

முதல்வர் மு. க. ஸ்டாலின் மற்றும் கனிமொழி எம்.பி. - கோப்புப் படம்
பகிர்:

சென்னை நாளை முன்னிட்டு, திமுக தலைவர்கள் மு.க. ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் சனிக்கிழமை (ஆக. 22) வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை உருவான நாளை நினைவு கூரும் வகையில், ’சென்னை நாள்’ ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இதுதொடர்பாக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

Advertisement

Advertisement

இருப்போர், இலார் என எல்லோரையும் அரவணைத்து ஏற்றம் தரும் அன்னையான சென்னைக்கு வயது 387!

மேம்பாலங்கள், கோட்டங்கள், பூங்காக்கள், நவீன பேருந்து முனையங்கள், மெட்ரோ இரயில், தொழில்நுட்பப் பூங்காக்கள், வானுயர்ந்து நிற்கும் மருத்துவமனை - நூலகக் கட்டடங்கள் எனக் கடந்த 60 ஆண்டுகாலச் சென்னை வரலாற்றை ரசித்து ரசித்துச் செதுக்கியவர்கள் நாங்கள் என்று மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை நாள் குறித்து திமுக எம்.பி கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

எண்ணற்ற கரங்களின் உழைப்பில் வளர்ந்த மெட்ராஸ் மாநகரம், இன்று சென்னையாக உயர்ந்து, கோடிக்கணக்கான மக்களின் கனவுகளைத் தாங்கி நிற்கிறது.

வந்தவர் அனைவருக்கும் இடமளிக்கும் சகோதரத்துவமும், பேதங்கள் கடந்த பன்மைத்துவமும் நிறைந்த சென்னையின் வரலாற்றைப் போற்றி பாதுகாப்போம். சென்னை நாள் வாழ்த்துகள்! என்று கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.

summary

DMK leaders M.K. Stalin and Kanimozhi extended their greetings on Saturday (Aug. 22) ahead of 'Chennai Day'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments