FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திரைப்படங்களில் வருவதுபோல... ஏதேனும் திட்டம் வைத்திருக்கிறாரா முதல்வர் விஜய்? கனிமொழி

சென்னை திருவொற்றியூர் கொலைச் சம்பவம் குறித்து திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கேள்வி...

10 செப்டம்பர் 2026, 11:29 am IST
முதல்வர் விஜய் - திமுக எம்.பி. கனிமொழி - (கோப்புப் படம்)
பகிர்:

திரைப்படங்களில் வருவது போல, முதலில் கொலைகள் அரங்கேறுவதை வேடிக்கை பார்த்துவிட்டு, பின்னர் தனது ‘கதாநாயக சாகசங்களை’ காட்டலாம் என்று முதல்வர் ஏதேனும் திட்டம் வைத்திருக்கிறாரா? என்று திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை திருவொற்றியூரில் மேற்கு மாட வீதியில் பிரதீப் ராஜ் என்பவர் அடையாள தெரியாத கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் தன்னை நேரில் அழைத்து மிரட்டியதாக நேற்று புகார் கூறியிருந்த நிலையில் இன்று படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டிருந்த நிலையில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில்,

"தலைநகர் சென்னையில் மீண்டும் ஒரு கொலை! இப்படி நாள்தோறும் தொடரும் கொலை கொள்ளை சம்பவங்களால் ஒரு சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

முதல்வர் ச. ஜோசப் விஜய், தான் ஒரு முன்னாள் கதாநாயகன் என்பதால், வணிகத் திரைப்படங்களில் காட்டப்படுவதைப் போல, முதலில் கொடூரக் கொலைகள் அரங்கேறுவதை வேடிக்கை பார்த்துவிட்டு, பின்னர் தனது ‘கதாநாயக சாகசங்களை’ காட்டலாம் என்று ஏதேனும் திட்டம் வைத்திருக்கிறாரா என்ற குழப்பமும் மக்களிடையே எழுகிறது" என்று பதிவிட்டுள்ளார்.

summary

Is the Chief Minister planning something like in the movies, Kanimozhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments