6.06 லட்சம் பேர் வெளியூருக்கு பயணம் 
தமிழ்நாடு

கிளாம்பாக்கத்திலிருந்து 6 லட்சம் பேர் பயணம்! நேற்று மட்டும்?

கிளாம்பாக்கத்திலிருந்து 6 லட்சம் பேர் பயணம் மேற்கொண்ட நிலையில் நேற்று மட்டும் 1.66 லட்சம் பேர் வெளியூர் சென்றுள்ளனர்.

DIN

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து ஜூன் 4ஆம் தேதி முதல் இன்று அதிகாலை வரை 11 ஆயிரம் பேருந்துகளில் சுமார் 6.06 லட்சம் பேர் வெளியூர்களுக்குச் சென்றுள்ளனர் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை முகூர்த்த நாள், சனிக்கிழமை பக்ரீத் பண்டிகை மற்றும் வார விடுமுறை நாள்கள் என்பதால், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

சனிக்கிழமை பக்ரீத் பண்டிகைக் கொண்டாடப்பட்டதால், வியாழக்கிழமை இரவு முதலே ஏராளமானோர் சென்னையிலிருந்து வெளியூர்களுக்குச் செல்ல தொடங்கியிருந்தனர்.

இதையும் படிக்க.. சொல்லப் போனால்... திட்டமிடப்படாத நெரிசல் கொலைகள்!

அந்த வகையில், ஜூன் 4ஆம் தேதி முதல் 8ஆம் தேதி அதிகாலை வரை சென்னையிலிருந்து இயக்கப்பட்ட 11,026 பேருந்துகளில் 6,06,430 பேர் பயணம் செய்துள்ளனர்.

நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து 1.66 லட்சம் பேர் வெளியூர்களுக்குச் சென்றுள்ளனர் என்று அரசுப் போக்குவரத்துக் கழகம் கூறியுள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ஏராளமானோர் வெளியூர் சென்ற நிலையில், 4ஆம் தேதி முதல் பேருந்து முனையம் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விடுமுறை அளிக்காத 85 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

சுதந்திரம் சரி, ஜனநாயகம்?

எல்லோருக்கும் நல்லவர்!

மண்டல கூட்டுறவு சங்க அலுவலகத்தில் சுதந்திர தினம்

இந்தியாவில் முதல்முறையாக பிவி கண்காணிப்பு செயற்கைக்கோள் திரள் அமைக்க அனுமதி

SCROLL FOR NEXT