கோப்புப்படம்  
தமிழ்நாடு

சென்னையில் விமானம் மீது மீண்டும் அடிக்கப்பட்ட லேசர் ஒளி!

சென்னை வந்த விமானம் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டது பற்றி..

DIN

சென்னையில் தரையிறங்க வந்த விமானத்தின் மீது இன்று காலை மீண்டும் லேசர் ஒளி அடிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புணேவில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு 178 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் செவ்வாய்க்கிழமை அதிகாலை வந்துள்ளது.

விமானம் தரையிறங்கும் நேரத்தில், சென்னை பரங்கிமலை பகுதியில் இருந்து விமானத்தின் மீது சக்திவாய்ந்த லேசர் ஒளி அடிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்த விமானிகள், விமானத்தை பத்திரமாக தரையிறக்கினர். இதனால், விமான நிலையத்தில் பதற்றம் நிலவியது.

கடந்த இரண்டு வாரங்களில் நடைபெறும் மூன்றாவது சம்பவம் இது. விமானங்களின் மீது லேசர் ஒளி எழுப்பும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை விமான நிலையத்தை சுற்றி 5 கி.மீ. தூரத்திற்கு ட்ரோன் பறக்கத் தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தினம் தினம் திருநாளே!

மொடக்குறிச்சி அருகே ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியா் வீட்டில் 17 பவுன், ரூ.1 லட்சம் திருட்டு

கொள்முதல் நிலையம் திறக்காததால் மழையில் நனைந்து நெல்மணிகள் முளைத்து சேதம்

முடக்கம் தவிர்ப்பீர்!

திருவாரூா், நாகை, மயிலாடுதுறையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

SCROLL FOR NEXT