முதல்வர் மு. க. ஸ்டாலினிடம் அறிக்கை அளித்த மாநிலக் கல்விக் கொள்கைக் குழு - கோப்புப்படம் கோப்பிலிருந்து...
தமிழ்நாடு

பள்ளிகளில் நடத்தப்படும் பயிற்சி மையங்களைத் தடை செய்ய பரிந்துரை!

பள்ளிகளால் அல்லது பள்ளிகளில் நடத்தப்படும் பயிற்சி மையங்களுக்குத் தடை விதிக்க மாநில கல்விக் கொள்கை வரையறைக் குழு பரிந்துரை!

DIN

சென்னை: பள்ளிகளில் மற்றும் பள்ளிகளால் நடத்தப்படும் பயிற்சி மையங்களை தடை செய்யவோ அல்லது வரைமுறைப்படுத்தவோ குழு அமைக்கப்பட வேண்டும் என்று மாநில அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மாநில கல்விக் கொள்கை வரையறைக் குழு இன்று தமிழக அரசிடம் அளித்த அறிக்கையில், இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நடைபெறும் நுழைவுத்தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்த இதுபோன்ற பயிற்சி மையங்கள் செயல்படுவதாகவும் அந்தக் குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தில்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு இன்று சமர்ப்பித்த அறிக்கையில், பள்ளிகளில் நடத்தப்படும் அல்லது பள்ளியே நடத்தும் பயிற்சி மையங்களை தடை செய்ய வேண்டும் என்றும், பள்ளிகளில் இவ்வாறு நடத்தப்படும் பயிற்சி மையங்கள், பாடத்திட்டத்தை முழுமையாக முடிக்காமலேயே, அல்லது பாடங்களை நடத்தாமலேயே, மாணவர்களை நுழைவுத் தேர்வுக்கு மட்டும் தயார் செய்வதாக் கல்விக் கொள்கை வரையறைக் குழு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அவதாருடன் போட்டி! ரூ. 1,000 கோடி வசூலை நோக்கி துரந்தர்!

15 ஆண்டுகளில் மோசமான ஆஸி. அணி? விமர்சித்த இங்கிலாந்து வீரருக்கு பதிலடி கொடுத்த லபுஷேன்!

டாக்ஸிக் கியாரா அத்வானி!

விஜய் இப்போது நடிகர் அல்ல: அருண் ராஜ்

2026 பேரவைத் தேர்தல்: பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்!

SCROLL FOR NEXT