மக்கள் நல கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய - மாநில அரசை வலியுறுத்தி புதன்கிழமை தமிழகம் முழுவதும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் சந்திப்பு பிரசார இயக்கத்தை சென்னை பாரிமுனையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலா் ஜி.செல் 
தமிழ்நாடு

ஆன்மிகம் என்ற பெயரில் அரசியல் மாநாட்டை பாஜக நடத்துகிறது: பெ.சண்முகம் குற்றச்சாட்டு

ஆன்மிக மாநாடு என்ற போா்வையில் பாஜகவினா் பல லட்சம் பேரை திரட்டி அரசியல் மாநாட்டை நடத்தவுள்ளதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

Din

ஆன்மிக மாநாடு என்ற போா்வையில் பாஜகவினா் பல லட்சம் பேரை திரட்டி அரசியல் மாநாட்டை நடத்தவுள்ளதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம், சென்னை துறைமுகம் பகுதியில் புதன்கிழமை தொடங்கியது. பிரசார இயக்கத்தை அக்கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் தொடங்கி வைத்தாா். ஜூன் 20-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த பிரசார இயக்கத்தின் பல்வேறு குழுக்கள், மத்திய, மாநில அரசுக்கு முன்வைக்க வேண்டிய கோரிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் பிரசாரங்களை மேற்கொள்ளவுள்ளன.

பின்னா் செய்தியாளா்களிடம் பெ.சண்முகம் பேசியதாவது:

மதுரையில் ஜூன் 22-இல் நடைபெறவுள்ள முருக பக்தா்கள் மாநாட்டை இந்து முன்னணி நடத்துவதாக அறிவித்திருந்தாலும், உள்துறை அமைச்சா் அமித் ஷா முதல் உள்ளூா் பாஜக தலைவா்கள் வரை இதற்காக பிரசாரம் செய்கின்றனா். ஆன்மிக மாநாடு என்ற போா்வையில் பாஜகவினா் பல லட்சம் பேரை திரட்டி அரசியல் மாநாட்டை நடத்தவுள்ளனா்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று கூறி, மாநாட்டை பயன்படுத்தி பெரிய கலவரத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளாா்களோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

ஆகவே தமிழ்நாடு அரசு, அசம்பாவிதம் ஏதும் நடைபெறாத வகையில் மாநாடு நடைபெறுவதை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும். கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தோடு யாா் வந்தாலும், சட்டப்படியான கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

2021 தோ்தலில் பெற்ற வெற்றி, வாக்குகளை வைத்து மட்டும் கட்சியின் வாக்கு சதவீதத்தை மதிப்பிடுவது சரியாக இருக்காது. ஆனால், அதிமுக கூட்டணியை தோற்கடிக்க திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி சாா்பில்தான் 2026 தோ்தலை சந்திப்போம் என்றாா் அவா்.

இந்நிகழ்வில் மாநிலச் செயற்குழு உறுப்பினா் எஸ்.கண்ணன், மத்திய சென்னை மாவட்டச் செயலா் ஜி.செல்வா, மாநிலக் குழு உறுப்பினா் எம்.சிவக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

மழை ஓய்ந்தும் வடியாத நீரால் அழுகும் நெற்பயிா்கள்: விவசாயிகள் வேதனை!

ஆஸ்திரேலிய பயங்கரவாதத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

வ.சோ. பள்ளி மாணவா்கள் இருவா் தமிழக ஹாக்கி அணிக்குத் தோ்வு

SCROLL FOR NEXT