தமிழ்நாடு

நியாயவிலைக் கடை விற்பனையாளர் பணி: நேர்முகத் தேர்வு அறிவிப்பு!

நியாயவிலைக் கடை விற்பனையாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு குறித்து....

DIN

சென்னை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் நடத்தும் நியாயவிலைக் கடை விற்பனையாளர் காலிப்பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது குறித்து  கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளில் உள்ள விற்பனையாளர்கள் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு, சென்னை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளம் வழி விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு  11.06.2025 முதல் 14.07.2025 முடிய “விவசாயக் கூட்டுறவுப் பணியாளர் பயிற்சி நிலையம் (ACSTI) மாதவரம் பால் பண்ணைக் காலனி, மாதவரம்,சென்னை - 600 051." (ஆவின் தலைமையகம் எதிரில்) நேர்முகத் தேர்வு  நடைபெற்று வருகிறது.

இணையவழி விண்ணப்பித்துள்ளோர் www.drbchn.in என்ற இணையதள முகவரியில் தங்களது நேர்முகத் தேர்வு அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து தங்களுக்கு குறிப்பிட்டுள்ள நாளில் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நியாயவிலைக் கடை விற்பனையாளர் பணியிடங்களுக்கு இணையதளம் வழி விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்கள் தற்போது நேர்முகத் தேர்வு நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க: பஞ்சாபில் அம்பேத்கர் சிலை உடைப்பு! காலிஸ்தான் ஆதரவாளர் மீது வழக்கு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷியாவில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 11 பேர் பலி, 130 பேர் காயம்

இந்தியாவில் 50%க்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் பாஜகவுடன் இல்லை! -பிரசாந்த் கிஷோர்

கோல்ட் காஃபி... ஆஷ்னா சவேரி!

தேர்தல் ஆணையத்தின் செய்தியாளர் சந்திப்பு... நாளை நடைபெறுகிறது!

ஏகே - 64 எப்படிப்பட்ட கதை? ஆதிக் விளக்கம்!

SCROLL FOR NEXT