முகப்பு
தமிழ்நாடு

வடகரை பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் பலி! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!

வடகரை பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக...

Updated On : 11 ஜூன் 2025, 2:23 pm IST
முதல்வர் மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்
பகிர்:

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், வடகரை கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் பலியான நிலையில் அவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவியை அறிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், வடகரை கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (ஜூன் 11) காலை சுமார் 9.00 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் காரியாட்டி வட்டம், கல்குறிச்சியை சேர்ந்த சவுண்டம்மாள் (வயது 54) க/பெ.ரவி மற்றும் தண்டியனேந்தலைச் சேர்ந்த கருப்பையா (வயது 37) த/பெ.அய்யணன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன். 

Advertisement

Advertisement

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவரும் காரியாபட்டியைச் சேர்ந்த கணேசன் (வயது 55), முருகன் (வயது 40), மாரியம்மாள் (வயது 40) மற்றும் பேச்சியம்மாள் (வயது 38) ஆகிய நான்கு நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். 

இந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: சில ஆண்களுக்கு மட்டும் மார்பகங்கள் பெரிதாக இருப்பது ஏன்? தடுப்பது எப்படி? சிகிச்சை என்ன?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.