முதல்வர் மு.க. ஸ்டாலின் DIPR
தமிழ்நாடு

நெல் கொள்முதல் விலை உயர்வு! - முதல்வர் அறிவிப்பு

நெல் கொள்முதல் விலை உயர்த்தப்படுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

DIN

விவசாயிகளுக்கான நெல் கொள்முதல் விலை உயர்த்தப்படுவதாக சேலத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து இன்று(வியாழக்கிழமை) காலை தண்ணீர் திறந்துவிட்டார்.

இதன்பின்னர் சேலம் மாவட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கிவைக்கும் நிகழ்வில் முதல்வர் பேசியபோது விவசாயிகளுக்கான ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி, விவசாயிகள் இனி ஒரு குவிண்டாலுக்கு ரூ. 2,500 பெறுவார்கள் என்று நெல் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்தார்.

"சாதாரண ரக நெல், குவிண்டாலுக்கு ரூ. 2,500-க்கும் சன்னரக நெல், குவிண்டாலுக்கு 2548-க்கும் கொள்முதல் செய்யப்படும். இதனால் 10 லட்சத்துக்கு அதிகமான விவசாயிகள் பயன்பெறுவார்கள்" எனத் தெரிவித்தார்.

மேலும், "திமுக ஆட்சியில் சேலம் மாவட்டத்திற்கு கூடுதல் திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன, 4 ஆண்டுகளுக்கு ரூ. 7,660 கோடி மதிப்பிலான திட்டங்கள் சேலம் மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன" என்று கூறியதுடன் சேலம் மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பூரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மர்ம மரணமா? நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாஜக எம்பி மனோஜ் திவாரி கன்வாா் யாத்திரை

வங்கதேசத்தில் வேகமெடுக்கும் டெங்கு பரவல்! பலி எண்ணிக்கை 83 ஆக அதிகரிப்பு!

டெவான் கான்வே, டேரில் மிட்செல் அரைசதம்; 2-வது இன்னிங்ஸில் ஜிம்பாப்வே தடுமாற்றம்!

ஓபிஎஸுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி!

SCROLL FOR NEXT