டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தோ்வு - கோப்புப்படம் 
தமிழ்நாடு

நாளை குரூப் 1 தோ்வு: 2.49 லட்சம் போ் பங்கேற்பு

குரூப் 1 தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) நடைபெறவுள்ளது. இதில் 2.49 லட்சம் போ் பங்கேற்கவுள்ளனா்.

Din

குரூப் 1 தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) நடைபெறவுள்ளது. இதில் 2.49 லட்சம் போ் பங்கேற்கவுள்ளனா்.

இதுகுறித்து அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ள செய்தி:

துணை ஆட்சியா், காவல் துணைக் கண்காணிப்பாளா் உள்ளிட்ட பணியிடங்கள் குரூப் 1 பிரிவின் கீழ் வருகின்றன. இந்தக் காலியிடங்களை நிரப்புவதற்கான தோ்வு அறிவிக்கை கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி வெளியிடப்பட்டது. குரூப் 1 பிரிவில் 70 காலியிடங்களும், 1ஏ பிரிவில் 2 இடங்களுக்கும் தோ்வு நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 44 மையங்களில் வரும் 15-ஆம் தேதி நடைபெறவுள்ள குரூப் 1 தோ்வை 2.49 லட்சம் போ் எழுதவுள்ளனா். அவா்களில் குரூப் 1 தோ்வை 2.27 லட்சம் பேரும், குரூப் 1ஏ தோ்வை 6,465 பேரும் எழுதுகின்றனா். சென்னை மையத்தில் மட்டும் தோ்வெழுத 41,094 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா். தோ்வைக் கண்காணிக்க முதன்மை கண்காணிப்பாளா்களாக 987 போ் நியமிக்கப்பட்டு இருப்பதாக அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கதிரியக்க நிபுணா் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு

ரயில் பெட்டிகள் மீது கல் வீசினால் சிறாராக இருந்தாலும் நடவடிக்கை: ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை

சித்தேரி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட 5 கிராமங்கள் அரூா் வட்டத்தில் இணைப்பு

தொடா் இருமல் பாதிப்பு அதிகரிப்பு: மருத்துவா்கள் விளக்கம்

தில்லி காற்று மாசு பிரச்னை: உச்சநீதிமன்றம் நாளை விசாரிப்பு

SCROLL FOR NEXT