கட்சி நிகழ்ச்சிக்கு கூட்டம் சேர்க்க அரசுப் பள்ளி மாணவர்களைப் பயன்படுத்த முயற்சித்த திமுகவின் செயல்பாட்டினை கண்டிப்பதாக பாஜக முன்னாள தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில்,ய கோவை மாவட்டம் பொள்ளாச்சி சமத்தூர் ராமஐயங்கார் நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்களை, நான் முதல்வன் திட்டம் என்று பொய் கூறி திமுக கட்சி நிகழ்ச்சிக்கு வர வற்புறுத்தியிருக்கிறார் அந்தப் பகுதி திமுக கவுன்சிலரின் கணவர்.
கட்டட வேலை செய்ய வைப்பது, கழிப்பறைகளை கழுவச் செய்வது, பள்ளியை சுத்தம் செய்வது என, அரசுப் பள்ளி மாணவர்களைத் தொடர்ந்து மாற்றாந்தாய் மனப்பான்மையில் நடத்தி வருகிறது திமுக அரசு. பல பள்ளிகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லை.
இந்த நிலையில், திமுக கட்சி நிகழ்ச்சிக்கு கூட்டம் சேர்க்க, அரசுப் பள்ளி மாணவர்களைப் பயன்படுத்த முயற்சிக்கும், திமுகவின் அகங்காரச் செயல்பாட்டினை, வன்மையாகக் கண்டிக்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.