முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை வரும் ஜூலை 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவர் சி. விஜயபாஸ்கர். இவர், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்தார்.
அந்தக் காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 35.79 கோடி மதிப்பில் சொத்து சேர்த்ததாக மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. விஜயபாஸ்கர் ஆஜராகவில்லை, அவர் தரப்பில் வழக்குரைஞர்கள் ஆஜராயினர்.
வழக்கு விசாரணையை வரும் ஜூலை 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி வி. வெங்கடேச பெருமாள் உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.