ஜி.கே.மணியை சந்தித்து நலம் விசாரித்த ராமதாஸ் X
தமிழ்நாடு

மருத்துவமனையில் ஜி.கே.மணியை சந்தித்து நலம் விசாரித்த ராமதாஸ்!

சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜி.கே.மணியுடன் ராமதாஸ் சந்திப்பு பற்றி...

DIN

நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக கௌரவத் தலைவர் ஜி.கே. மணியை கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் கெளரவத் தலைவரும் அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவருமான ஜி.கே. மணி நெஞ்சு வலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம்(ஜூன் 18) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜி.கே. மணியை பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

சேலம் மேற்கு தொகுதியின் பாமக சட்டப்பேரவை உறுப்பினர் அருளும் நெஞ்சு வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்தடையைக் கண்டித்து பெண்கள் சாலை மறியல்

மீன்சுருட்டி தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.பி. ஆய்வு

கூட்டணி ஆட்சிக்கு அச்சாரமிடும் தவெக!

விமானத்தில் தகராறு: கீழே இறக்கிவிடப்பட்ட அதிமுக நிா்வாகி

ஓட்டுநா் அடித்து கொலை வழக்கு: ஒருவா் கைது

SCROLL FOR NEXT