அண்ணா பல்கலை. மாணவி வழக்கு தொடர்பாக அண்ணாமலையிடம் விசாரணை நடத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் எம்.எல்.ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். குற்றவாளி ஞானசேகரன் யார், யாரிடம் தொலைபேசியில் பேசினார் என்ற ஆதாரம் தன்னிடம் இருப்பதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
தன்னிடம் ஆதாரம் இருப்பதாக அண்ணாமலை தெரிவித்த நிலையில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றவாளி எனஅறிவிக்கப்பட்ட ஞானசேகரனுக்கு ஆயுள்தண்டனையும், ரூ.90 ஆயிரம் அபராதமும் விதித்து சென்னைமகளிா் நீதிமன்றம் தீா்ப்பு வழங்கி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.