முன்னாள் அமைச்சர் வேலுமணி செய்தியாளர்கள் சந்திப்பு. 
தமிழ்நாடு

கொள்கையை எப்போதும் விட்டுத்தரமாட்டார் இபிஎஸ்: முன்னாள் அமைச்சர் வேலுமணி

முருகன் மாநாடு குறித்து முன்னாள் அமைச்சர் வேலுமணி பேச்சு.

DIN

கொள்கையை எப்போதும் எடப்பாடி பழனிசாமி விட்டுக்கொடுக்கமாட்டார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

முருகன் மாநாடு குறித்து முன்னாள் அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

சிண்டு முடிவதே ஆர்.எஸ். பாரதியின் வேலை. அவரின் அறிக்கைகள் எல்லாம் உண்மையாக இருக்காது என்பதில் மக்கள் மிகத் தெளிவாக உள்ளனர்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சுயமரியாதையோடு கொள்கையை விட்டுக்கொடுக்காத இயக்கமாக என்றைக்கும் அதிமுக இருக்கும். எல்லா பிரச்னைகளையும் திசைதிருப்பி ஊடகத்தில் பேச வைத்து மடைமாற்றும் அரசியலைதான் திமுக செய்கிறது.

அதிமுக- பாஜக கூட்டணி அமைந்ததுமே மக்கள் முடிவு செய்துவிட்டனர்; கண்டிப்பாக அதிமுக ஆட்சி, இபிஎஸ் தலைமையில் உறுதி என்று! இன்னும் அதிகமான கட்சிகள் இபிஎஸ் தலைமையில் சேரும்.

வக்ஃப் வாரிய திருத்த மசோதா வந்தபோதுகூட, அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்தே வாக்களித்தனர். எனவே, கொள்கை வேறு; கூட்டணி வேறு! திமுகவினர் சுயநலத்திற்காக எப்படி வேண்டுமானாலும் பேசுவர்.

முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா விடியோ குறித்து முன்கூட்டியே எதுவும் சொல்லப்படவில்லை. அண்ணா பற்றி பேசியதால் 2024ல் இபிஎஸ் என்ன முடிவெடுத்தார் என அனைவருக்கும் தெரியும் என்று பேசினார்.

இதையும் படிக்க: நீட் தேர்வில் பணம்தான் விளையாடுகிறது: மு.க. ஸ்டாலின்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக ஆதவ் அர்ஜுனா மீது வழக்கு!

நியூசி.க்கு எதிரான டி20 தொடரிலிருந்து மேக்ஸ்வெல் விலகல்!

பிகார் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 4 காசுகள் சரிந்து ரூ.88.79 ஆக நிறைவு!

விளம்பரம் இல்லாமல் யூடியூப் பார்க்கலாம்... யூடியூப் பிரீமியம் லைட் இந்தியாவில் அறிமுகம்!

SCROLL FOR NEXT