பவன் கல்யாணுடன் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை.  
தமிழ்நாடு

பாஜகவில் நயினார், அண்ணாமலை இடையே போட்டி: அமைச்சர் சேகர் பாபு

பாஜகவில் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை இடையே போட்டி நிலவுவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

DIN

பாஜகவில் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை இடையே போட்டி நிலவுவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் திங்கள்கிழமை சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அண்ணா, பெரியார், ஜெயலலிதா, எம்ஜிஆர் குறித்து பல்வேறு விமர்சனங்களை வைத்தவர் முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை.

அடிமை சாசனத்தை பாஜகவிடம் அதிமுக எழுதிவிட்டு மேடையில் அமர்ந்து கொண்டுள்ளனர் முன்னாள் அமைச்சர்கள்.

பவன் கல்யாணக்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன தொடர்பு. பவன் கல்யாண், சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று காட்டட்டும் பிறகு அவர் என்ன வேண்டுமானாலும் பேசட்டும் நாங்கள் கேட்கிறோம்.

இதுவரை 117 முருகன் கோயில்களுக்கு குடமுழுக்கு நடந்துள்ளது. மேடை போட்டு மக்களை பிளவுபடுத்துகிறார்கள் பாஜகவினர். பாஜகவில் நைனார் நாகேந்திரன் பலமுடையவரா ? அண்ணாமலை பலம் வாய்ந்தவரா என்ற போட்டி நிலவுகிறது.

ஒருவர் பச்சை துண்டை எடுத்து சுற்றிக் கொண்டு இருக்கிறார் அது நயினார் நாகேந்திரன், காவி துண்டை எடுத்து சுற்றிக் கொண்டு இருப்பவர் அண்ணாமலை.

யார் வெற்றி பெறுகிறார்கள் என்று இனி தான் தெரியும். இவர்கள் போட்டிக்காக நடந்த மாநாடு தான் மதுரை முருகர் மாநாடு என்றார்.

ஆ.ராசாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு: விசாரணை வரும் 30ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பூரில் தேசியக் கொடியேற்றினார் ஆட்சியர்!

செங்கோட்டை விழாவை புறக்கணித்த ராகுல், கார்கே! காங்கிரஸ் அலுவலகத்தில் கொண்டாட்டம்!

Dinamani வார ராசிபலன்! | Aug 17 முதல் 23 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட ஒன்பது முக்கிய அறிவிப்புகள்!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேசியக் கொடி ஏற்றம்!

SCROLL FOR NEXT