மேட்டூர் அணை DIN
தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு அதிக நீர்வரத்து: வெள்ள அபாய எச்சரிக்கை!

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...

DIN

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை நீர்மட்டம் 117.39 அடியை எட்டியுள்ள நிலையில் விரைவில் மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் கால்வாய் வழியாக வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி முதல் 75 ஆயிரம் கன அடி வரை படிப்படியாக நீர் திறப்பு அதிகரிக்கப்படும்.

இதனால் மேட்டூர் அணைக்குக் கீழ்ப் பகுதியில் உள்ள காவிரி டெல்டா மாவட்ட ஆட்சியர்கள், காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்களையும் தாழ்வான பகுதியில் உள்ளவர்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படியும் அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படியும் மேட்டூர் அணை உபகோட்ட உதவி செயற்பொறியாளர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள வெள்ள கட்டுப்பாட்டு அறையில் நீர்வளத் துறை அதிகாரிகள் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர். மதகு இயக்க பணியாளர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

High water inflow to Mettur Dam: Flood warning

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

OPS- ஐ மீண்டும் சேர்க்க வாய்ப்பே இல்லை! - EPS

விஜய் நல்ல நடிகர்தான்! ஆனால் சிறந்த அரசியவாதி நாங்கதான்! - EPS!

”யாருக்காக உச்சத்தை விட்டுட்டு வந்தீங்க?” விஜய்யை தாக்கிப் பேசிய EPS!

23 இந்திய மீனவர்கள் விடுவிப்பு! 128 வங்கதேசத்தினர் ஒப்படைப்பு!

2014 - 22 ஆண்டுகளுக்கான திரைப்பட, சின்ன திரை விருதுகள் அறிவிப்பு!

SCROLL FOR NEXT