விராலிமலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மைக்செட் தொழிலாளி ரமேஷ்  
தமிழ்நாடு

விராலிமலை: மின்சாரம் தாக்கி இளைஞர் பலி!

கோயில் விழாவுக்கு ஒலிபெருக்கி கட்டும் போது மின்சாரம் தாக்கியதில் மைக்செட் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

DIN

விராலிமலையில் கோயில் விழாவுக்கு ஒலிபெருக்கி கட்டும் போது மின்சாரம் தாக்கியதில் மைக்செட் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் உள்ள அம்மன் கோயில் 7ம் ஆண்டு வருடாபிஷேகம் விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு கோயில் பகுதியை சுற்றி ஸ்பீக்கர்கள்,ஒலிபெருக்கிகள் கட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நள்ளிரவு விராலிமலை கடைவீதி அருகே உள்ள ஹைமாஸ் லைட் கம்பத்தில் ஏறி ஒலிபெருக்கி கட்டும் போது அவ்வழியாக சென்ற குறைந்த அழுத்த மின்வட கம்மி எதிர்பாராதவிதமாக தொழிலாளி மீது உரசியதில் விராலிமலை அடுத்துள்ள சரளபட்டியைச் சேர்ந்த ரமேஷ் (22) என்ற இளைஞர் கம்பத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டு அருகில் இருந்த வணிக கடை கூரையில் விழுந்தார்.

இதில் பலத்த காயமடைந்த அவரை சக தொழிலாளிகள் மீட்டு விராலிமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அப்போது அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் அவரை பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

இதுகுறித்து தகவலறிந்த விராலிமலை போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க | சொல்லப் போனால்... ஊருக்குள் இன்னும் எத்தனை ஞானசேகரன்கள்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரோகம் செய்வது நன்றாகத் தெரியும்: செல்வராகவன்

சென்னையில் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நவீனுக்கு வரவேற்பு

ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்த திலக் வர்மா!

லவ் அட்வைஸ் பாடல்!

ஓடிபி இல்லாமலே வாட்ஸ்ஆப் ஹேக் செய்யப்படுகிறதாம்..! எச்சரிக்கை!

SCROLL FOR NEXT