சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஆவடி, கும்மிடிப்பூண்டிக்கு புதிதாக இரு ரயில்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது.
இதனால், புறநகர் ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து முன்னதாக சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், சென்னை சென்ட்ரல், கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு, ஆவடி, கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் 5 முதல் 10 நிமிடங்களுக்கு ஒரு மின்சார ரயில் இயக்கப்படுகிறது.
இந்நிலையில், சென்னை சென்ட்ரலிலிருந்து ஆவடி மற்றும் கும்மிடிப்பூண்டிக்கு புதிதாக இரு மின்சார ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆவடியிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு அதிகாலை 5.25-க்கும், மறுமாா்க்கமாக சென்ட்ரலிலிருந்து முற்பகல் 11.15-க்கும் புதிய ரயில் (எண் 43006, 43013) இயக்கப்படும்.
அதுபோல், கும்மிடிப்பூண்டியிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு காலை 9.10-க்கும், மறுமாா்க்கமாக சென்ட்ரலிலிருந்து இரவு 10.35-க்கும் புதிய ரயில் (எண் 42014, 42035) இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் இன்று முதல் 4 புதிய ரயில்கள் இயக்கப்படுவதால் சென்னை புறநகர் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிக்க.. காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை: அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சித் தகவல்!
கூடுதல் ரயில் சேவை மூலம் காலை மற்றும் இரவில் வேலைக்குச் செல்வோரும், வேலையிலிருந்து வீடு திரும்புவோரும் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.