முகப்பு
தமிழ்நாடு

சத்தியம் வெல்லும்: விஜயகாந்த் எக்ஸ் பக்கத்தில் வெளியான பதிவு!

சத்தியம் வெல்லும்; நாளை நமதே என மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிடப்பட்டது.

Updated On : 4 மார்ச், 2025 at 12:12 PM
பிரேமலதா விஜயகாந்த். உள்படம்: விஜயகாந்த் எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியான பதிவு
பகிர்:

சத்தியம் வெல்லும்; நாளை நமதே என மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிடப்பட்டது. எனினும் சிலநிமிடங்களில் அந்தப் பதிவு நீக்கப்பட்டுவிட்டது.

தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்குவதாக யாரும் கூறவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்த நிலையில், இவ்வாறு பதிவிடப்பட்டிருந்தது.

மேலும், டிஎம்டிகே ஃபார் டிஎன் (DMDKforTN) என்ற ஹேஷ்டேக்கும் பயன்படுத்தப்பட்டிருந்தது.

கடந்த மக்களவைத் தேர்தல் கூட்டணியின்போது தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தருவதாகக் கூறப்பட்டது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி,

''கூட்டணி குறித்த பேச்சையெல்லாம் விட்டுவிடுங்கள், தேவையில்லாத கேள்வியெல்லாம் கேட்காதீர்கள், நாங்கள் ஏதாவது கூறினோமோ? யார் யார் சொல்வதெல்லாம் எங்களிடம் கேட்காதீர்கள். நாங்கள் ஏதாவது வெளிப்படுத்தினோமா?'' என பதிலளித்திருந்தார்.

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஏற்கெனவே ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும் விரைவில் பெயர் அறிவிக்கப்படும் என்றும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முன்னதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தருவதாக எப்போது கூறினோம்? இபிஎஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.