கர்நாடக முதல்வர் சித்தராமையாவுடன் அமைச்சர் பொன்முடி சந்திப்பு. 
தமிழ்நாடு

கர்நாடக முதல்வர், துணை முதல்வருடன் பொன்முடி சந்திப்பு!

கர்நாடக முதல்வர், துணை முதல்வரை பொன்முடி சந்தித்தது பற்றி...

DIN

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமாரை தமிழக அமைச்சர் பொன்முடி புதன்கிழமை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்பு தொடா்பாக தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், தென்மாநிலங்களின் எம்.பி.க்களை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கை குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், சென்னையில் வருகிற மார்ச் 22 ஆம் தேதியன்று தொகுதி மறுவரையறை குறித்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் பங்கேற்க தென்மாநில அரசியல் கட்சிகளின் தலைவர்களை தமிழக அமைச்சர்கள் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து வருகின்றனர்.

பெங்களூருவுக்கு சென்ற தமிழக அமைச்சர் பொன்முடி, எம்பி அப்துல்லா ஆகியோர் கர்நாடக முதல்வர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவரும் துணை முதல்வருமான டி.கே. சிவக்குமார் ஆகியோரை நேரில் சந்தித்து கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.

முன்னதாக ஒடிஸா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக், ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோரை நேரில் சந்தித்து தமிழக அமைச்சர்கள் அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

செங்கல் சூளையை மூடக் கோரி ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT