முகப்பு
தமிழ்நாடு

மதுரையில் லாரி - பேருந்து மோதி விபத்து

மதுரையில் லாரி - பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

Updated On : 13 மார்ச் 2025, 6:10 pm IST
பேருந்து மீது லாரி மோதி விபத்து - கோப்புப்படம்
பகிர்:

மதுரையில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது வேகமாக வந்த தனியார் பயணிகள் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதுரை விமான நிலையம் அருகே வெளிப்புற வட்டச்சாலையில் வேகமாக வந்த பேருந்து, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியதில் இந்த விபத்து நேரிட்டதாகக் கூறப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த பயணிகள் பேருந்து இந்த விபத்தில் சிக்கியதாகவும் இதில், பேருந்தில் இருந்த 5 பயணிகள் படுகாயம் அடைந்தனர். வயதான பெண்மணி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

பேருந்துக்குள் சிக்கியிருந்த பயணிகளை மீட்க முடியாமல், கிரேன் வரவழைக்கப்பட்டு, கிரேன் உதவியோடு பேருந்து அப்புறப்படுத்தப்பட்டு, அதில் சிக்கியிருந்தவர்கள் மீட்கப்பட்டதாக, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

பேருந்து ஓட்டுநர் அதிவேகமாக பேருந்தை இயக்கியதே விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. பேருந்து மோதிய வேகத்தில், சாலையோரம் நின்றிருந்த லாரி, அதன் முன் நிறுத்தப்பட்டிருந்த காரை இடித்ததில், கார் சாலையோரம் இருந்த பள்ளத்தில் விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments