முகப்பு
தமிழ்நாடு

160 நிமிடங்கள்! தமிழக பட்ஜெட் உரை நிறைவு!

தமிழக நிதிநிலை அறிக்கை மீதான உரை நிறைவு..

Updated On : 14 மார்ச், 2025 at 6:51 AM
தங்கம் தென்னரசு
பகிர்:

தமிழக சட்டப்பேரவையில் 2025 - 26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சுமார் 160 நிமிடங்கள் உரையாற்றினார்.

அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலை தமிழ்நாடு எதிா்கொள்ளவுள்ள நிலையில், அதற்கு முன்பாக திமுக தலைமையிலான அரசு தாக்கல் செய்துள்ள முழுமையான நிதிநிலை அறிக்கை இதுவாகும்.

இரண்டாவது முறையாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து தங்கம் தென்னரசு உரையாற்றிய நிலையில், கூட்டத்தொடர் தொடங்கியவுடன் மதுபான ஊழல் விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதனிடையே தொடர்ந்து உரையாற்றிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சுமார் 160 நிமிடங்கள் பட்ஜெட்டின் மீதான உரையை நீடித்தார்.

முக்கிய அறிவிப்புகள்

  1. அரசுத் துறையில் காலியாகவுள்ள 40,000 பணியிடங்கள் நிரப்பப்படும்.

  2. வங்கிக் கடன் பெற அரசு ஊழியர்களுக்கு சலுகை.

  3. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கரோனா காலத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் முறை மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.

  4. சைதாப்பேட்டையில் அரசு ஊழியர்களுக்கு மேலும் குடியிருப்புகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

  5. 20 லட்சம் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி அல்லது டேப் வழங்கப்படும்.

  6. சென்னை மெட்ரோ மூன்றாவது வழித்தடத்துக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படும்.

  7. மூன்று இடங்களில் மீத அதிவேக ரயில் வழித்தட அமைப்பை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்படும்.

  8. மகளிரை தொழில்முனைவோராக்கும் பெருந்திட்டம் கொண்டு வரப்படும்.

  9. ரூ. 10 லட்சம் வரை அசையா சொத்துகளை பெண்கள் பெயரில் பதிவு செய்தால் பதிவுக் கட்டணம் 1 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படும்.

  10. கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு.

  11. ஊரகப் பகுதிகளில் புனரமைக்க முடியாத மக்களின் 25000 வீடுகள் புதிதாக கட்டித் தரப்படும்.

  12. நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் 5,256 வீடுகள் சீரமைக்கப்படும்.

முழு கட்டுரையைப் படிக்க →