முகப்பு
தமிழக பட்ஜெட்

கலீல் ஜிப்ரானின் கவிதையை மேற்கோள்காட்டிய தங்கம் தென்னரசு!

பட்ஜெட்டில் கலீல் ஜிப்ரானின் கவிதையை மேற்கோள்காட்டிய தங்கம் தென்னரசு.

Updated On : 17 பிப்ரவரி 2026, 11:04 am IST
தங்கம் தென்னரசு
பகிர்:

லெபனானில் பிறந்து, அமெரிக்காவில் வாழ்ந்து, உலகப் புகழ்பெற்ற கலைஞர் கலீல் ஜிப்ரானின் கவிதையை மேற்கோள்காட்டிப் பேசினார் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.

தமிழக பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில், தமிழக இடைக்கால பட்ஜெட்டை பேரவையில் இன்று தாக்கல் செய்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உரையாற்றி வருகிறார்.

அப்போது அவர் பேசுகையில், Trees are poems that the earth writes upon the sky. We fell them down and turn them into paper, That we may record our emptiness" என்ற ஆங்கில கவிதையை புகழ்பெற்ற கவிஞர் கலீல் ஜிப்ரான் (Kahlil Gibran) கூறியிருக்கிறார்.

Advertisement

Advertisement

வானத்திலிருந்து பூமி மீது எழுதப்படும் கவிதைகளே மரங்கள். ஆனால், நாம் மரங்களை வீழ்த்தி நமது வெறுமையைப் பதிவு செய்ய காகிதமாக மாற்றத் துணிகிறோம். நம் வெறுமையினை நிரப்பிட, சாதாரண காகிதங்களைச் செய்ய துணிகிறோம் என்று அந்த கவிதை விரிக்கிறது.

கலீல் ஜிப்ரானின் பசுமை தோய்ந்த வரிகளை மனதில் தாங்கி, தமிழகம் முழுவதும் பசுமைப் பரப்பை அதிகரித்திட இந்த அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

பசுமைத் தமிழ்நாடு என்ற அமைப்பின் மூலம் பசுமை பரப்புகள் அதிகரித்து தேசிய இலக்கான 33 சதவிகிதத்தை அடைய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

கடந்த 5 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 100 புதிய பாதுகாக்கப்பட்ட காடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நாட்டின் பசுமைப் பரப்புகளை அதிகரிக்கவும் உதவும். தமிழக அரசின் புரட்சியான பல திட்டங்களில் இது முன்னணி திட்டமாக உள்ளது.

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பசுமைப் பூங்காக்களை அமைக்கும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன், ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் மக்களும் பயன்பெறுகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.