மழை (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

தமிழகத்தில் மீண்டும் தொடங்கிய மழை! மகிழ்ச்சியில் மக்கள்!

தமிழகத்தில் இன்றுமுதல் அடுத்த 6 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு.

DIN

தமிழகம் மற்றும் புதுவையில் இன்றுமுதல்(மார்ச் 16) அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,

16-03-2025: தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதையும் படிக்க: சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்த டிராகன் விண்கலம்!

17-03-2025 முதல் 22-03-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

இன்று (16-03-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (17-03-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநில அளவிலான கராத்தே போட்டி: தனியாா் பள்ளி மாணவா்கள் சாதனை

கமுதியில் இரும்பு கடையில் தீ விபத்து

தொண்டியில் போக்குவரத்துப் பணிமனை அமைக்கக் கோரிக்கை

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலைய பயணிகள் காத்திருப்பு அறையில் செயல்படாத மின்விசிறிகள்

பாஜக இளைஞரணி தலைவா் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் சிறை

SCROLL FOR NEXT