சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒன்பது சிறார்களை மீட்டெடுத்த ரயில்வே இருப்புப் பாதை போலீசாருக்கு உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
மேலும் 3 பேர் கொண்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்தும் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த தரகர்கள் மீது வழக்குப்பதிவு செய்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை மூன்று பேர் கொண்ட கும்பல் பிஹார் மாநிலத்தில் இருந்து வந்துள்ளது. இவர்கள் நடவடிக்கை, சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்ததால், இவர்களை ரயில்வே இருப்புப் பாதை போலீசார் விசாரணை நடத்தினர். சிறார்களை கொத்தடிமைகளாக வேலைக்குச் சேர்த்து விடும் மூவரைக் கைது செய்தனர்.
பின்னர் சென்னை சென்ட்ரல் ரயில்வே இருப்புப் பாதை காவல்துறை கண்காணிப்பாளர் கர்ணன் தலைமையில் சென்னை சென்ட்ரல் ரயில்வே காவல் இருப்புப் பாதை கோவிந்தராஜ் முன்னிலும் சிசிடிவி காட்சிகளுடன் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்துக்கு இடமான நபர்கள் என்பது கண்டறியப்பட்டதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.சென்னை சென்ட்ரல் ரயில்வே இருப்புப் பாதை போலீசார் மற்றும் ஆர்பிஎஃப் போலீசார் இணைந்தபடி ரயில் நிலையத்திலிருந்து கொத்தடிமைகளாக 9 சிறார்களை ரயிலில் விட்டு கீழே இறக்கியதும் சம்பவ இடத்திற்கு சென்று மீட்டெடுத்தனர்.
பின்னர் ரயில்வே இருப்பு பாதை காவல் நிலையத்தில் மூவரை அழைத்து காவல் நிலையத்தில் விசாரணை செய்த போது தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் பல கடைகளிலும் மேலும் கட்டடத் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக வேலைக்கு பிகார் மாநிலம், உத்தர பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய பல மாநிலங்களைச் சேர்ந்த சிறுவர்களை அவர்களின் பெற்றோரிடம் சிறு நிதி கொடுத்து வேலைக்காக அழைத்து வந்து வேலை தரும் பெரிய முதாலாளிகளிடம் பெரிய தொகைக்கு பெற்றுவிடுவோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
பணியில் அமர்த்தப்படும் சிறார்கள் கொத்தடிமைகளாக பயன்படுத்தலாம் என்பது விசாரணையில் தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்த சென்ட்ரல் ரயில் நிலைய ரயில்வே பாதை போலீசார் மூவரின் மீது வழக்குப்பதிவு செய்து மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டதில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுரேந்தர் டிராவத் (50), அதே ஊரைசேர்ந்த அஜய்குமார் (28), உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த சைலேஷ் ராஜ் பால் (21) ஆகிய மூவரும் தொடர்ந்து இதே தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் எந்தெந்த மாநிலத்திற்கு ஆட்கள் தேவைப்படுகிறதோ அந்தந்த மாநிலத்திற்கு சிறார்களை அனுப்பி வைப்பதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்ததும் சென்னைக்கு இவர்களை யார் வரவழைத்தது, மேலும் இதுபோன்று செயல்படும் தரகர்கள் யார் என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ள, மூவரும், தொடர் விசாரணை நிறைவடைந்த பின் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைக்க உள்ளனர்.
மேலும் ஒன்பது சிறார்களை மீட்டெடுத்த ரயில்வே துறை இருப்புப் பாதை போலீசாரை காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் சென்னை ராயபுரத்தில் அமைந்துள்ள அரசு தங்கும் விடுதிக்கு அனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.