கோப்புப் படம் 
தமிழ்நாடு

பிறை தெரிந்தது! நாளை ரமலான் பண்டிகை - தலைமை காஜி அறிவிப்பு

பிறை தெரிந்ததால் தமிழ்நாடு முழுவதும் நாளை ரமலான் கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி அறிவிப்பு.

DIN

பிறை தெரிந்ததால் தமிழ்நாடு முழுவதும் நாளை (மார்ச் 31) ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஹிஜ்ரி 1446 ரமலான் மாதம் 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, ஆங்கில மாதம் மார்ச் 30 ஆம் தேதி அன்று மாலை ஷவ்வால் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் தென்பட்டது.

ஆகையால், திங்கள்கிழமை நாளை ( மார்ச் 31) ஷவ்வால் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் நாளை ரமலான் கொண்டாடப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில அரபு நாடுகளில், இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், நாடு முழுவதும் நாளை ரமலான் கொண்டாடப்படவுள்ளது.

இதையும் படிக்க | 1-5ஆம் வகுப்புகளுக்கு முன்கூட்டியே தேர்வு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொச்சியை வீழ்த்தியது பெங்களூரு

ஹரியாணா: ஐஜி தற்கொலை வழக்கில் எஸ்பி பணியிட மாற்றம்!உடற்கூறாய்வுக்கு குடும்பத்தினா் எதிா்ப்பு!

பாரா தடகள உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்றவா்களுக்கு ரூ.1.09 கோடி

‘குவால்காம்’ சிஇஓ - பிரதமா் மோடி சந்திப்பு: செயற்கை நுண்ணறிவு குறித்து ஆலோசனை

பச்சைமலை அரசுப் பள்ளி மாணவா்களை இருப்பிடம் தேடி அழைத்து வர ஏற்பாடு!

SCROLL FOR NEXT