முதல்வர் ஸ்டாலின். கோப்புப்படம்.
தமிழ்நாடு

சிங்கப்பூர் தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சிங்கப்பூர் தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

DIN

சிங்கப்பூர் தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், மக்கள் செயல் கட்சி-யை (PAP) அதன் 14-ஆவது தொடர்ச்சியான வெற்றிக்கு வழிநடத்திச் சென்றுள்ள பிரதமர் லாரன்ஸ் வாங்கிற்கு எனது வாழ்த்துகள்.

தலைவராகச் சந்தித்த முதல் தேர்தலில் இத்தகைய பெருவெற்றியைச் சிங்கப்பூர் மக்களிடம் இருந்து அவர் பெற்றுள்ளார்.

தமிழ் மக்களுடன் தொடர்ந்து நல்லுறவைப் பேணி, தமிழ் மொழியையும் பண்பாட்டையும் உயர்த்திப் பிடிக்கும் அவரது முயற்சிகள் அனைவரையும் அரவணைக்கும் சிங்கப்பூரின் தன்மையை வெளிப்படுத்துகிறது.

சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

போரை ஆதரிப்பவர்கள் அதன் பாதிப்புகளையும் சிந்திக்க வேண்டும்- வைகோ

சிங்கப்பூா் நாடாளுமன்ற தோ்தல் சனிக்கிழமை நடந்து முடிந்த நிலையில், முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஆளுங்கட்சியான பிஏபி கட்சி இமாலய வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. மொத்தமுள்ள 97 இடங்களில் 87 இடங்களை அக்கட்சியே கைப்பற்றியுள்ளது.

இதையடுத்து, சிங்கப்பூர் பிரதமராக லாரன்ஸ் வாங்க் மீண்டும் பதவியில் தொடருகிறார். தேர்தலில் வெற்றி பெற்ற லாரன்ஸ் வாங்கிற் பிரதமர் மோடி ஏற்கெனவே வாழ்த்து தெரிவித்த நிலையில் தற்போது தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினும் வாழ்த்து கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக தரவு இல்லை! மத்திய அரசு

தேவாரம், நத்தம் பகுதிகளில் நாளை மின் தடை

கரூா் சம்பவத்தில் காயமடைந்த 10 குடும்பத்தினரிடம் விசாரணை

பெரம்பலூா் மாவட்ட உணவகங்களில் நெகிழி பயன்பாட்டை தவிா்க்க முடிவு

SCROLL FOR NEXT