பள்ளத்தில் கவிழ்ந்த கார்.  
தமிழ்நாடு

சென்னையில் சாலை பள்ளத்தில் கவிழ்ந்த கார்

சென்னை தரமணியில் இருந்து திருவான்மியூர் செல்லும் சாலையில் சனிக்கிழமை திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்தது

DIN

சென்னை தரமணியில் இருந்து திருவான்மியூர் செல்லும் சாலையில் சனிக்கிழமை திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்தது.

சிக்னலில் நின்றுக்கொண்டிருந்த கார் பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்ததில் காரில் பயணித்த 5 பேரும் உள்ளே சிக்கினர். உடனே பள்ளத்தில் விழுந்த காரை கிரேன் உதவியோடு போலீஸார் மீட்டு காரில் இருந்த அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.

சாலை பள்ளத்தில் கார் கவிழ்ந்ததால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மெட்ரோ ரயில் பணிகளால் சாலையில் பள்ளம் ஏற்பட்டதாக தகவல் பரவிய நிலையில் அதற்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. சென்னை திருவான்மியூர் அருகே மெட்ரோ ரயில் பணிகளால் பள்ளம் ஏற்படவில்லை.

மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி காண்போம்: முதல்வர் ஸ்டாலின்

மெட்ரோ பணி நடைபெற்று வரும் இடத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில் தான் பள்ளம் ஏற்பட்டது.

சாலையின் கீழேச் செல்லும் கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாகவே பள்ளம் ஏற்பட்டது. இவ்வாறு மெட்ரோ நிர்வாகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய படத்தில் கடத்தல்காரனாக திலீப்! இரட்டை அர்த்த வசனங்களால் வலுக்கும் கண்டனம்!

வார பலன்கள் - கடகம்

தற்கொலை செய்திருக்க வேண்டும்... பாதிக்கப்பட்ட நடிகை வேதனை!

காஞ்சிபுரத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 2,74,274 வாக்காளர்கள் நீக்கம்

வார பலன்கள் - மிதுனம்

SCROLL FOR NEXT