FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வேதாரண்யம் பகுதியில் 3ஆவது நாளாக தொடர் மழை: உப்பு உற்பத்தி பாதிப்பு

வேதாரண்யம் பகுதியில் 3ஆவது நாளாக தொடர் மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

19 மே 2025, 12:13 pm IST
உப்பு உற்பத்தி.
பகிர்:

வேதாரண்யம் தெற்கு கடலோரப் பகுதியில் 3ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை இரவும் நீடித்த தொடர் மழையின் காரணமாக சுமார் 7 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

நாகை மாவட்டம், வேதாரண்யம் தெற்கு கடலோரப் பகுதியில் பகுதியில் சனிக்கிழமை முன்னிரவில் மேற்கு திசையில் இருந்து வீசிய பலத்த சூறைக்காற்று, இடி மின்னலுடன் மழைப்பொழிவு தொடர்ந்தது.

ஞாயிற்றுக்கிழமை இரவும் தொடர்ந்த இந்த மழை, திங்கள்கிழமை காலை வரை நீடித்தது.

Advertisement

Advertisement

தென்மேற்குப் பருவமழை முன்னெச்சரிக்கை: தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை!

இந்த மழையின் காரணமாக எள் மற்றும் பயறு வகைப் பயிர்கள் பாதிப்படைந்துள்ளன. வேதாரண்யம், அகஸ்தியம்பள்ளி உப்பளப் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளதால் சுமார் 7 ஆயிரம் ஏக்கர் பரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள உப்பு உற்பத்தி பணி பாதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments