சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து!
பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக...
சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் இன்று(மே 25) அதிகாலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அம்மாப்பட்டியில் தனியார் பட்டாசு ஆலையொன்று இயங்கி வருகிறது. இங்கு திடீரென ஏற்பட்ட வெடி விபத்தால் பட்டாசு தயாரிப்பதற்காக மூலப்பொருள்கள் வைக்கப்பட்டிருந்த அறை தரைமட்டமானது.
இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் வெடி விபத்தால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சம் மடைந்தனர்.
Advertisement
Advertisement
அதிகாலை நேரம் என்பதால் விபத்து நடந்த இடத்தில் தொழிலாளர்கள் யாரும் இல்லை. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: பெங்களூரு: கரோனா தொற்று பாதித்தவர் உயிரிழப்பு? மருத்துவர்கள் மறுப்பு!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.