கமல்ஹாசன் பேட்டி DIN
தமிழ்நாடு

நாட்டுக்கு தேவை என்பதால் கூட்டணி; தவறுசெய்தால்தான் மன்னிப்பு கேட்பேன்: கமல்ஹாசன்

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பேட்டி...

DIN

தவறுசெய்தால்தான் மன்னிப்பு கேட்பேன் என்று கன்னட மொழி விவகாரம் குறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்துப் பேசினார்.

மாநிலங்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதையடுத்து கமல்ஹாசன், எம்.பி. ஆகிறார். இதையடுத்து கமல்ஹாசன், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய கமல்ஹாசன்,

"மாநிலங்களவையில் மநீமவுக்கு ஒரு இடம் கொடுத்ததற்கு முதல்வரைச் சந்தித்து நன்றி கூறினோம். மாநிலங்களவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை செய்ய முதல்வர் அறிவுறுத்தியிருக்கிறார்.

நாட்டுக்குத் தேவை என்பதால் திமுகவுடன் கூட்டணிக்கு வந்துள்ளோம். மாநிலங்களவையில் தமிழ்நாட்டுக்காக எனது குரல் ஒலிக்கும். ஆனால், தமிழ்நாட்டுக்காக எப்போதும் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன்" என்று கூறினார்.

கன்னட விவகாரம் குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த கமல்,

"இது ஜனநாயக நாடு. சட்டத்தையும் நீதியையும் நம்புகிறேன். மேலும் அன்புதான் முதன்மை என்று நம்புகிறேன். கேரள, ஆந்திர, கர்நாடக மக்களின் மீதான என்னுடைய அன்பு உண்மையானது.

நான் தவறு செய்திருந்தால்தான் மன்னிப்பு கேட்பேன், தவறே செய்யவில்லை என்றால் கேட்க மாட்டேன். இதுதான் என்னுடைய வாழ்க்கைமுறை" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 7 போ் கைது

நவராத்திரியில் உச்சம் தொட்ட வாகன, வீட்டு உபயோக பொருள்கள் விற்பனை!

இந்தோனேசிய பள்ளி கட்டட விபத்து: உயிரிழப்பு 14-ஆக உயா்வு

பிரிட்டன் யூத ஆலயத் தாக்குதல்: 6 பேரிடம் விசாரணை

மின்னணு பயண அனுமதி: கட்டாயமாக்கியது இலங்கை

SCROLL FOR NEXT