யானையின் எலும்புக்கூடு.  
தமிழ்நாடு

வேலூர்: மலைப் பகுதியில் யானையின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு

அரவட்லா மலைப் பகுதியில் யானையின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

அரவட்லா மலைப் பகுதியில் யானையின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு வனச்சரகத்துக்குட்பட்ட அரவட்லா மலைப் பகுதியில் வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இறந்த யானையின் எலும்புக்கூடு இருப்பதை அவர்கள் கண்டுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று வனத் துறை அலுவலர்கள், மருத்துவரை வரவழைத்து பரிசோதனை செய்தனர்.

பரிசோதனைக்குப் பிறகு இறந்த யானையின் எலும்புக்கூடுகளை வனப்பகுதியிலே தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். இதுகுறித்து வனத் துறையினர் கூறுகையில், இறந்த யானை சுமார் ஏழு முதல் எட்டு வயது பெண் யானையாக உள்ளது.

தண்ணீர் அருந்த வந்து தவறி விழுந்து யானை இறந்திருக்கக் கூடும்.

ரஷிய இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் சரிவு!

சுமார் ஒரு மாதத்திற்கு மேல் ஆன நிலையில் இதன் உடல் பாகங்களை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி உள்ளோம். முழுவிபரம் பின்னர் தெரிய வரும் எனத் தெரிவித்தார்.

An elephant skeleton has been found in the Aravatla mountain area.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹெல்மெட்டுக்கு பதிலாக தலையில் கடாய்! போக்குவரத்து விதிகளை மீறாத இளைஞர்!

சிறப்பு தீவிர திருத்த பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்

3வது டி20: இந்தியாவுக்கு 187 ரன்கள் இலக்கு!

மனம் பேசும் மொழி... மலர்!

காதலின் சாரல் மொழி... சத்யா தேவராஜன்!

SCROLL FOR NEXT