சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை!
சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை தொடர்பாக...
சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் அமைந்தகரை, சூளைமேடு, நெற்குன்றம் உள்ளிட்ட 5 இடங்களில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகார் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று(நவ. 4) காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மற்றும் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement
ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்துவரும் தொழிலதிபர்களின் வீடுகளில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது.
சோதனை முழுமையாக நிறைவடைந்த பின்னரே, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், நகை, பணம் குறித்த விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Enforcement officers are conducting raids at 5 locations in Chennai.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.