தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சென்னையில் இன்று (நவ. 4) வெளியிட்டார்.
தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் பொதுத் தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும் என்ற எதிர்பாா்ப்பு மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் நிலவியது.
இந்நிலையில், சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் இன்று முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு முன்பாக பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
பிளஸ் 2(12 ஆம் வகுப்பு) மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 2 முதல் மார்ச் 26 ஆம் வரை நடைபெறவுள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு பிப். 9 முதல் 16 ஆம் தேதி வரை நடைபெறும். பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியாகும்.
அதேபோல, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 11-ல் தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 20 ஆம் தேதி வெளியாகும்.
பிளஸ் 2 பொதுத் தேர்வை 8.07 லட்சம் மாணவர்களும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 8.70 லட்சம் மாணவர்களும் எழுதவுள்ளனர். ஒவ்வொரு தேர்வுக்கும் 3 முதல் 5 நாள்கள் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில்கொண்டு பொதுத் தேர்வு தேதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.