முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை ஒரே நாளில் இருமுறை உயர்வு! மாலை நிலவரம்!

தங்கம் விலை ஒரே நாளில் இருமுறை உயர்ந்துள்ளது தொடர்பாக...

Updated On : 19 நவம்பர், 2025 at 10:59 AM
கோப்புப் படம்
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்ந்துள்ளது. இன்று(நவ. 6) காலை சவரனுக்கு ரூ. 560 உயர்ந்த நிலையில், மாலையும் ரூ. 560 உயர்ந்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

கடந்த நவ. 1-ஆம் தேதி சவரன் ரூ.90,480-க்கு விற்பனையான நிலையில், செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.90,000-க்கு விற்பனையானது. புதன்கிழமை ரூ.560 குறைந்து ரூ.89,440-க்கும் விற்பனையானது.

இதனிடையே, ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.11,250-க்கும், சவரனுக்கு கு ரூ.560 உயர்ந்து ரூ.90,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று மாலை வர்த்தகம் நிறைவடையும் தருவாயில், தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.11,320-க்கும், சவரனுக்கு கு ரூ.560 உயர்ந்து ரூ.90,560-க்கும் விற்பனையாகிறது.

அதேபோல், வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.165-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2,000 உயர்ந்து ரூ.1.65 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

summary

Gold prices rise twice in a single day

முழு கட்டுரையைப் படிக்க →