திருமண விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு DMK
தமிழ்நாடு

இயங்கிக் கொண்டிருப்பதுதான் எனக்குப் பிடிக்கும்: முதல்வர் ஸ்டாலின்

இயங்கிக் கொண்டிருப்பதுதான் எனக்குப் பிடிக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்ரீரங்கம்: இயங்கிக் கொண்டிருப்பதுதான் எனக்குப் பிடிக்கும். நிற்க நேரமில்லாமல் பம்பரம் போல சுழன்றடித்து நாம் வேலை செய்து கொண்டிருக்கிறோம் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

ஸ்ரீரங்கத்தில் இன்று நடைபெற்ற திமுக எம்எல்ஏ பழனியாண்டி இல்லத் திருமண விழாவில் பங்கேற்று உரையாற்றிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், இயங்கிக் கொண்டிருப்பதுதான் எனக்கு பிடிக்கும். இயங்குவதால்தான் இயக்கம் என்கிறோம் என்றார்.

மேலும், நிற்க நேரமில்லாமல் பம்பரம் போல சுழன்றடித்து நாம் வேலை செய்து கொண்டிருக்கிறோம். ஸ்ரீரங்கத்தை 20 ஆண்டுகளுக்குப் பிறகு திமுகவின் கோட்டையாக மாற்றிக் காட்டியவர் பழனியாண்டி. கடந்த 25 ஆண்டுகளில் திமுக என்ற இயக்கம் நின்றதே இல்லை.

புதுப் புது உத்திகளோடு நம்மைத் தாக்கி அழிக்க வந்து கொண்டிருக்கிறார்கள். வருமான வரி, எஸ்ஐஆர் உள்ளிட்ட பல்வேறு உத்திகளோடு தமிழகத்தை நோக்கி வருகிறார்கள். வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக நேற்று விடியோ ஒன்றை வெளியிட்டேன். எஸ்ஐஆர் கொண்டு வந்து திமுகவை அழித்துவிடலாம் என எதிரிகள் திட்டம் தீட்டியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் மூலம் திமுகவை அழிக்கும் முயற்சி எடுபடாது. மற்ற மாநிலங்களில் வேண்டுமானால் எடுபடும். தமிழ்நாட்டில் எடுபடாது என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணி: பிப். முதல் வாரத்தில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை?

என்னை நம்புங்கள்... அப்டேட் கொடுத்த அட்லி!

விமான விபத்தில் அஜித் பவார் பலி!

தங்கம் விலை அதிரடி உயர்வு! ரூ. 400-ஐ தொட்ட வெள்ளி!

அஜித் பவார் சென்ற விமான விபத்து! நிலை என்ன?

SCROLL FOR NEXT