மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு
மேட்டூர் அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை காலை 115.37 அடியிலிருந்து 114.86 அடியாக குறைந்தது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை காலை 115.37 அடியிலிருந்து 114.86 அடியாக குறைந்தது.
அணையின் நீர் இருப்பு 85.50 டிஎம்சியாக உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6,719 கன அடியிலிருந்து 6,753 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 15,000 கனஅடி வீதமும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 400 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
summary